நல்லூரானின் கைலாச வாகன உற்சவம்

நல்லூரானின் கைலாச வாகன உற்சவம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 20ம் திருவிழாவான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.

நல்லூர் மகோற்சவ திருவிழாக்கள் மிக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை மாலை தங்கரத உற்சவமும், நாளை செவ்வாய்க்கிழமை காலை மாம்பழ திருவிழாவும், மாலை ஒரு முக திருவிழாவும், நாளை மறுநாள் புதன்கிழமை மாலை சப்பர திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் வெள்ளிக்கிழமை காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று, மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.

CATEGORIES
TAGS
Share This