புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைப் முறைப்பாடளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே
நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் கடந்த 13 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், காணொளிகள் மற்றும் படத்தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் , அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை.
பொதுமக்கள் பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகள் குறித்து கவலைப்பட்டால் அல்லது அவர்கள் பொதுமக்களுக்கு சரியான சேவையை வழங்கவில்லை என்றால், அவர்கள் அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்ப முடியும்.
பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.