2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.5% வளர்ச்சியை அடையும் – மத்திய வங்கி கணிப்பு

அமெரிக்க வரிகளால் இலங்கையின் பொருளாதாரம் பாதிப்பதற்கான சில அபாயங்கள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு 4.5% இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட பணவியல் கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான உலக வங்கியின் 3.5 வீத வளர்ச்சிக் கணிப்பைவிட மத்திய வங்கியின் கணிப்பு அதிகமாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) $2.9 பில்லியன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் அடிப்படையில், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024 இல் 5% வளர்ச்சியடைந்தது, கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து வலுவான நிலையை நோக்கி நாடு நகர்வதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
மத்திய வங்கியின் அறிக்கையில் எதிர்காலத்திற்கான சில அபாயங்கள் குறித்து விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இரண்டாவது பெரிய அந்நியச் செலாவணியை ஈட்டும் துறையாக ஆடை உற்பத்தித் துறை உள்ளது. இந்தத் துறை அதன் உற்பத்தியில் 40% ஐ அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதுடன், கடந்த ஆண்டு 4.8 பில்லியன் டொலர் வருமானத்தையும் ஈட்டியது. இத்துறையில் சுமார் 300,000 பேர் பணிப்புரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.
அமெரிக்காவின் வரி விதிப்பை ஓரளவு சாதகமாக்கி கொண்டுள்ளமையின் ஊடாக இலங்கை அதன் பாதையில் பயணிப்பதற்கான கடுமையான தடை நீங்கியுள்ளதாகவும் மத்திய கூறியுள்ளது.