நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு – அவரசமாக தரையிறக்கம்

நடுவானில் பறந்த விமானத்தில் கோளாறு – அவரசமாக தரையிறக்கம்

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 166 பயணிகளுடன் கோழிக்கோடுக்கு தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று பயணித்திருந்தது.

இந்நிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்த விமானி கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

எனினும், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நள்ளிரவு 12.10 மணி அளவில் விமானத்தை அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று மாலை கோழிக்கோடு புறப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Share This