புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் – அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்பு சபை இன்று (12) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.
இன்று பிற்பகல் 02.00 மணிக்கு அரசியலமைப்பு சபை கூடவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரை குறித்து அரசியலமைப்பு சபை முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பதில் பொலிஸ்மா அதிபரான பிரியந்த வீரசூரியவின் பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரியந்த வீரசூரிய அரசியலமைப்பு சபையால் புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.