கொழும்பில் 11 மாதங்களில் 268 தீ விபத்துகள்
இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் (ஜனவரி முதல் நவம்பர் வரை) கொழும்பு நகர எல்லையில் மட்டும் 268 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்துகளில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் அடங்களாக 37 உயிர்கள் இதில் இழக்கப்பட்டுள்ளன. 54 அவசரநிலைகள் ஏற்பட்டதுடன், 65 முறை அம்புலன்ஸ் சேவைகள் பயன்படுத்தும் தேவை எழுந்திருந்ததாகவும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு கூறியுள்ளது.