
நல்லூர் திருவிழா – கைலாச வாகனத்தில் காட்சியளித்த முருகன்
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கைலாச வாகனம் உற்சவம் இடம்பெற்றது.
காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சமேதராய் திருக்கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
மாலை மஞ்ச திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
