காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்

காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்

பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. ஹமாஸ் படையினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இவர்களில் சிலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.

அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பிணைக்கைதி ஒருவர் தனது புதைகுழியை தோண்டும் அதிர்ச்சி காணொளியை ஹமாஸ் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது,

‘ பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.

பிணைக்கைதி புதைகுழி தோண்டும் காணொளி வெளியிட்டதை பார்க்கும்போது, ஹமாஸ் என்ன விரும்புகிறது என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை.

இந்த திகில் வீடியோக்களைப் பயன்படுத்தி எங்களை வேதனையடைய செய்ய விரும்புகிறார்கள். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் ராணுவத்திற்கு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதேவேளை, போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் உடனடியாக உடன்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )