இந்தியா வருகிறார் மெஸ்ஸி

இந்தியா வருகிறார் மெஸ்ஸி

அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும் மெஸ்ஸி சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தை முன்பதிவு செய்வது உட்பட அனைத்து ஏற்பாடுகளும் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மெஸ்ஸியிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காத்திருப்பததாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளன.

பயணத்​திட்​டத்​தின்​படி, லியோனல் மெஸ்ஸி டிசம்​பர் 12ஆம் திகதி இரவு 10 மணி​யள​வில் கொல்​கத்​தாவுக்கு வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )