வட்டுக்கோட்டை மோதல் சம்பவம் – மூவர் கைது

வட்டுக்கோட்டை மோதல் சம்பவம் – மூவர் கைது

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே நேற்றிரவு முதல்; இன்று அதிகாலை வரையான காலப்பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை அழைத்து கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

இதற்கமைய மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த இருவரும், சங்கரத்தைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் மூளாய் பகுதியில் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This