
நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து பேண மத்திய வங்கி முடிவு
நாணயக் கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயக் கொள்கை சபை கூட்டம் நேற்று நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருநாள் கொள்கை வட்டி 7.75 சதவீதமாக தொடர்ந்தும் காணப்படும்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது
CATEGORIES இலங்கை
