தொடரை கைப்பற்றப் போவது யார்? இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

தொடரை கைப்பற்றப் போவது யார்? இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்திய மகளிர் மற்றும் இங்கிலாந்து மகளீர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி செஸ்டர்- லீ- ஸ்டிரீட்டில் இன்று இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இருபதுக்கு இருபது தொடர் ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடரை இந்திய மகளிர் அணி கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலா மூன்றுப் போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரின் இரு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆடவர் அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே மூன்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி இரு போட்டிகளிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும், அந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This