சர்வதேச நாணய நிதியத்தியத்தின் பணியில் இருந்து கீதா கோபிநாத் விடைபெறுகின்றார்

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பதவி விலகவுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகி அமெரிக்காவிலுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அவர் பொருளாதாரத் துறையில் ஆரம்ப கிரிகோரி மற்றும் அனியா காஃபி பொருளாதாரப் பேராசிரியராக பணி ஆற்றவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இன்று செவ்வாய்க்கிழமை (22) அறிவித்துள்ளார்.
கீதா கோபிநாத் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தலைமைப் பொருளாதார நிபுணராக சர்வதேச நாணய நிதியத்தில் இணைந்தார். ஜனவரி 2022 ஆம் ஆண்டு முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
கீதா கோபிநாத் இலங்கைக்கு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பின்னணியில் அவரது பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரின் இந்த திடீர் தீர்மானம் சொந்த முடிவாகக் கருதப்படுகின்றது.