அடுத்த 3-4 ஆண்டுகளில் எந்த தேர்தலும் இடம்பெறாது – தேர்தல்கள் ஆணையர்

அடுத்த 3-4 ஆண்டுகளில் எந்த தேர்தலும் இடம்பெறாது – தேர்தல்கள் ஆணையர்

அடுத்த மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகளில் நாட்டில் எந்த தேர்தலும் இடம்பெறாது என தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2026 தொடக்கம் 2029 காலகட்டத்திற்கான தேர்தல் ஆணையத்தின் மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பாக குருநாகலில் உள்ள கட்சிக் குழுக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் குருநாகலில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிப்பதை கட்டாயமாக்கவும், வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணையர் ஜெனரல் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டில் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏற்படும் பெரும் செலவைக் கருத்தில் கொண்டு, தேர்தலில் அதிகபட்ச முடிவுகளை அடைவதே இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, எதிர்காலத்தில் தேர்தலுக்காக வைப்புத் தொகையை அதிகரிக்க முடியும் என நம்புவதாகவும் தேர்தல் ஆணையர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This