தெமட்டகொட ருவானை கொலை மேற்கொண்ட முயற்சி முறியடிப்பு

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு இரவு விடுதியில், பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த “தெமட்டகொட ருவன்” என்பவரை கொலை செய்வதற்கான திட்டம் நேற்று (19) முறியடிக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
துப்பாக்கி ஏந்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து இரவு விடுதிக்கு அருகில் சுற்றித் திரிவதை விடுதியின் பாதுகாப்புப் பிரிவினர் கண்டுள்ளனர்.
அவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தை, அந்த இடத்தின் பாதுகாப்புப் பணியாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இதன்போது அங்கிருந்த பாதுகாவளர் ஒருவர், T-56 துப்பாக்கியை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவரைக் கவனித்து, அவரை எதிர்கொண்டு, பெரும் போராட்டத்திற்குப் பின்னர் ஆயுதத்தைக் கைப்பற்றினார்.
பின்னர் இரண்டு சந்தேக நபர்களும் துப்பாக்கியை கைவிட்டு, மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பின்னர் தெமட்டகொட ருவான், தன்னைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் கொண்டு வந்த T-56 துப்பாக்கியை கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.