தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி

தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி

தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேரிடர் காரணமாக தற்போது 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை தொடங்கிய மழை காரணமாக நாட்டில் சுமார் 10,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகள் பேரிடரால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் ஆயிரக்கணக்கான சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதற்கிடையில், தற்போதைய நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு கடுமையான நிலச்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Share This