செல்ஃபி எடுக்க முற்பட்ட இளைஞன் வைத்தியசாலையில்
புகையிரதத்தற்கு முன்னால் செல்ஃபி புகைப்படம் எடுக்க சென்ற நபர் புகையிரதத்தில் மோதுண்டு நேற்றையதினம் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
தனது கையடக்க தொலைபேசியினால் செல்ஃபி எடுக்க முற்பட்ட கொலன்னாவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார்.
மேலும், நேற்றைய தினம் எல்ல ஒன்பது வளைவு புகையிரத பாலத்திற்கு முன் புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞன், தேமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(ராமு தனராஜா)