சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்தார் இமாத் வஸீம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இமாட் வஸீம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதான அறிவித்துள்ளார்.
35 வயதான இமாட் வஸீம் கடந்த 2015ம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரையில் 55 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் களம் கண்டுள்ளார்.
மேலும் 55 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 986 ஓட்டங்களையும், 44 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 75 டி20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 554 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் , 73 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.
மேலும் இமாத் வஸீம் கடைசியாக கடந்த ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவம் செய்து ஆடியிருந்தார்.
அண்மைக் காலமாக பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்க முடியாத அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது ஓய்வு முடிவு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இமாத் வஸீம் உள்நாட்டு கிரிக்கெட், மற்றும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என குறிப்பிட்டுள்ளதுடன், இலங்கையில் தற்சமயம் இடம்பெற்று வரும் டி10 போட்டிகளில் இமாத் வஸீம் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)