நியூயார்க்கில் கடும் வெள்ளம் – 1966 விமானங்கள் ரத்து

நியூயார்க்கில் கடும் வெள்ளம் – 1966 விமானங்கள் ரத்து

நியூயார்க் மாநிலத்தைத் தாக்கிய புயல் அலையைத் தொடர்ந்து, நியூயார்க் மாநிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று அந்தப் பகுதியில் கனமழை பெய்துள்ளது, நகரின் வடக்கு புறநகர்ப் பகுதிகளிலும் நியூ ஜெர்சியிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது, இதனால் ஆளுநர் பில் மர்பி அந்தப் பகுதிகளுக்கு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார்.

பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் கூற்றுப்படி, வெள்ளம் நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை பாதைகளில் போக்குவரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் மெட்ரோ-நார்த் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீராகும் வரை நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹாட்டன் மற்றும் பிராங்க்ஸ் இடையேயான ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் அந்த பாதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மோசமான வானிலை விமானப் போக்குவரத்துகளையும் பாதித்துள்ளது, இதனால் பல பயணிகள் சிக்கித் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, 1,966 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் 10,090 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This