லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது விமானம் தீப்பற்றி ஏரிந்து வெடித்து சிதறுவதை காணமுடிந்தது.
விமான விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பயணிகள் என நால்வர் உயிரிழந்ததாக 24 மணி நேரத்தின் பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.