முன் பிணை கோரி நீதிமன்றை நாடினார் ராஜித சேனாரத்ன

முன் பிணை கோரி நீதிமன்றை நாடினார் ராஜித சேனாரத்ன

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மனுவை பரிசீலித்த பின்னர், எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அறிவித்தல் ஒன்றை அனுப்புமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.

இதேவேளை, ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதில் முன்னணியில் இருந்தவர் என்று அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வரலாறு ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யும் என்றும் அவர் கூறினார்.

தனது தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும் தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்றும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.

இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

Share This