முன்னாள் அமைச்சர் ராஜிதவை தேடும் சிஐடி

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் சேனாரத்னவை கைது செய்ய முடியாதுள்ளதாகவும் அவர் அவரது வீட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்காக சென்ற குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த மீன் பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சட்டத்துக்கு முரணாக வழங்கிய குற்றச்சாட்டின் நீதிமன்றில் நடை பெற்று வரும் வழக்கு விசாரணையில் அவர் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில், அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.