க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன

2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, https://www.doenets.lk/examresults அல்லது https://www.exams.gov.lk/examresults ஆகிய இணைப்பில் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 (2025) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 474,147 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதில் 398,182 பாடசாலை பரீட்சாத்திகளும், 75,965 தளியார் பரீட்சாத்திகளும் தோற்றியிருந்தனர்.
534 மையங்களுடன் ஒருங்கிணைந்து 3,664 தேர்வு மையங்களில் பரீட்சை நடைபெற்றிருந்தது.
இந்நிலையில், அனைத்து பாடசாலை அதிபர்களும் பெறுபேறு முடிவுகளை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய ஒன்லைன் வசதி வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.