துஷார உப்புல்தெனியவுக்குப் பிணை

துஷார உப்புல்தெனியவுக்குப் பிணை

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று புதன்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சந்தேக நபரை 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதிபதி, அவர் சிறைச்சாலைகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும், வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டதுடன், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This