போட்டியின் போக்கையே மாற்றிய டிராவிஸ்-ஸ்மித் ஜோடி
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா நல்ல நிலையில் உள்ளது.
அவுஸ்திரேலியான அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதங்களை பூர்த்தி செய்ததுடன், அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை சடுதியாக உயர்த்தினர்.
ஸ்டீவ் ஸ்மித் 101 ஓட்டங்களுடனும், ஹெட் 152 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். இந்தியா சார்பில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ராவைத் தவிர, வேறு யாராலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முடியவில்லை.
நிதிஷ் குமார் ரெட்டி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஒரு கட்டத்தில் 75 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஸ்மித்துடன் இணைந்த டிராவிஸ் ஹெட் அண்மைய மீட்டனர்.
இருவரும் இணைந்து போட்டியின் போக்கை மாற்றினர். இறுதியாக, இந்தியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
எந்த வகையான போட்டியாக இருந்தாலும் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு தலைவலியாக மாறியுள்ளார். கடந்த காலங்களில் இந்திய அணிக்கு எதிரான டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி வருகின்றார்.
இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் பிரிஸ்பேனில் உள்ள கப்பா கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக விளையாடிய மூன்று இன்னிங்ஸிலும் டிராவிஸ் ஹெட் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடித்துள்ளார். 160 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 152 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்த மைதானத்தில் கடைசியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும், ஓட்டங்கள் எதுவும் பெறாம் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார்.
குறிப்பாக இந்த மூன்று போட்டிகளிலும் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.