டிரம்பிற்கு நோபல் பரிசு பரிந்துரைத்த நெதன்யாகு

அமெரிக்காவிற்கு மூன்றாவது முறையாக சுற்றுப்பயணம் சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு வெள்ளை மாளிகையில் விருந்தளிக்கப்பட்டது.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசிற்கு பரிந்துரைத்துள்ளதாக நெதன்யாகு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், காஸா போர் குறித்து பேசிய நெதன்யாகு, பாலத்தீனியர்களுடன் சமாதானத்தை விரும்புவதாகவும், ஆனால் எதிர்கால சுதந்திர பாலத்தீனிய அரசு என்பது இஸ்ரேலை அழிப்பதற்கான தளமாக அமைந்துவிடும் என்றும் கூறியுள்ளார்.
ஹமாஸ் போர் நிறுத்தத்தை விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், அதற்கான திட்டமிடல் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.