பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் தகவல்
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“பண்டிகை காலங்களின் போது பொருட்களின் விலை அதிகரிப்பது சந்தையில் பொதுவான நிலை.
எனவே, எதிர்காலத்தில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டு நாட்டில் பொருட்கள் பற்றாக்குறையை உருவாக்கினர்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்கிறோம். சந்தையில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச நிறுவனங்கள் மூலம் தலையிடுவதற்கு அரசாங்கமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
குறிப்பாக சதொச மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை 25 வீதம் குறைக்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.