ஹொரணையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 11 பேர் கைது

ஹொரணை அமரனகொல்ல பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 11 பேரை ஹொரணை பொலிஸார் கைது செய்தனர்.
இந்தக் குழு சமூக ஊடகங்கள் மூலம் தங்களை ஒருங்கிணைத்து, மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் செலுத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய , மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஹதபாங்கொட, இங்கிரிய, அங்குருவாதொட்ட, பண்டாரகம மற்றும் மொரகஹஹேன பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்களில் மூவருக்கு சாரதி உரிமங்கள் கூட இல்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.