கொஸ்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 03 விசாரணைக் குழுக்கள் நியமனம்

கொஸ்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 03 விசாரணைக் குழுக்கள் நியமனம்

கொஸ்கம – சுதுவெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத இருவரால் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளையைச் சேர்ந்த 12 வயது மகள், 30 வயதுடைய அவரது தாய் மற்றும் 44 வயதான மற்றுமொருவர் ஆகியோரே இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர்.

இசைக்கச்சேரியை பார்வையிட்டு மீண்டும் வீடு திரும்பும் போதே மூவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS
Share This