ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் நாளை நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக கூட்டத்திலும் ஜனாதிபதி கலந்துக் கொள்கிறார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த உள்ளிட்டோர் இந்த விஜயத்தில் கலந்துக்கொள்கின்றனர்.