அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம்

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் இணக்கம்

இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்து  பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தினால் முன்மொழியப்பட்ட காசா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசாவில் ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு, மத்தியஸ்தர்களின் அண்மைய திட்டம் தொடர்பாக பலஸ்தீன பிரிவுகளுடன் தமது இயக்கம் கலந்துரையாடல்களை
நிறைவுசெய்துள்ளதாக ஹமாஸ் தனது உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சுமார் 21 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதலில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கான இறுதி முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இந்த ஒப்பந்ததிற்கு இஸ்ரேல் இணக்கம் தெரிவித்ததாக கூறிய ட்ரம்ப் ஹமாஸும் இணங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This