மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்

மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த பெண் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This