யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் நியமனம்

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் நியமனம்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக கே. சிவகரன் இன்றைய தினம் செவ்வாய்க்க்கிழமை மாவட்ட செயலர் பிரதீபன் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்ற கே. சிவகரன், முன்னர் வேலணை பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This