விரைவில் பேருந்து பயணிகளுக்கும் சீட் பெல்ட் – இலங்கையில் கட்டாயமாக்கப்படவுள்ள சட்டம்

இன்று (01) முதல் அனைத்து பேருந்து சாரதிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாத ஓட்டுநர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் அக்டோபர் 1, 2011 முதல் நடைமுறையில் உள்ளது.
இதற்கிடையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து, திவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது வெறும் சட்ட அமலாக்கத்தின் ஒரு விஷயம் மட்டுமல்ல, விபத்துகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
உங்கள் பதில் என்ன?