கஹவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

கஹவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

கஹவத்தை – யாயன்னா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு கொஸ்கெல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சென்று, அந்த வீட்டில் இருந்து இரண்டு இளைஞர்களைக் கடத்திச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் 22 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், 27 வயதான மற்றைய நபர், சிகிச்சைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் குறித்து கஹவத்தை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Share This