துஷார உப்புல்தெனியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

துஷார உப்புல்தெனியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவுப் பிறப்பட்டது.

அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவுப் பிறப்பட்டது.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், அவர் கடந்த 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

 

CATEGORIES
TAGS
Share This