
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் பிணையில் விடுவிப்பு
அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த வழக்கு ஒகஸ்ட் 04 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
CATEGORIES இலங்கை
