இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்த ஒருவர் கைது

இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்த ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்து, சந்தேக நபர் இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியதாகக் கூறினார்.

இந்நிலையில், சந்தேக நபர் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களிடமிருந்து தொடர்புடைய பணத்தைப் பெற்றாரா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் விசாரணைகள் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

உண்மைகளை பரிசீலித்த நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபரை 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )