முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது

முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் முன்னணி நரம்பியல் நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன கைது செய்யப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தகவல்படி, வைத்தியர் விஜேரத்னவும் மேலும் இரு நபர்களும், சில மருந்து வகைகளை அரச மருத்துவமனைக்கு வேண்டுமென்றே கொள்முதல் செய்யாமல், தமது தனியார் மருத்துவ நிறுவனம் மூலம் நோயாளிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டப்பட்ட திட்டத்தினால் நோயாளிகளுக்கு ரூபா 30 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வைத்தியர் விஜேரத்ன இதற்கு முன்னரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் “துமிந்த சில்வா மருத்துவ மூடிமறைப்பு” விவகாரத்தில் ஈடுபட்டதாக மீது குற்றம் சாட்டப்பட்டார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை வைத்தியர் விஜேரத்ன தொடர்ந்து மறுத்து வருகிறார்.

CATEGORIES
TAGS
Share This