லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தால், லண்டன் – சென்னை மற்றும் சென்னை – லண்டன் என இரு மார்க்கமாகச் செல்லவிருந்த இரண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இரு மார்க்கத்திலும் 700க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிறுவனத்தால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 242 போரில் 241 பேர் உயிரிழந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த விமானம் விடுதி ஒன்றின் மேல் விழுந்தமையின் காரணம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 274 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் விமானப் பயணிகளின் பாதுகாப்புக் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )