நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா

நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா

நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உட்பட 04 இடங்களில் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றதாக இந்திய
செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள அரசின் சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அம்பியூலன்ஸ்களை இந்தியா பரிசளித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா நேபாளத்திற்கு அம்பியூலன்ஸ்களை பரிசாக அளித்து வருகிறது. 1994 ஆம் ஆண்டு முதல், நேபாளத்திற்கு மொத்தம் 1,049 அம்பியூலன்ஸ்களை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் நேபாள கல்வி நிறுவனங்களுக்கு 300 பாடசாலை பஸ்களையும் இந்தியா வழங்கியுள்ளது.

 

Share This