யாழில் 220 கிலோ கஞ்சா மீட்பு

யாழில் 220 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணத்தில் 220 கிலோ கிராம் கஞ்சா போதை பொருளுடன் படகொன்றினை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிகண்டி பகுதியை அண்மித்த கடற்கரை பகுதியில், படகொன்றில் கொண்டு வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இறக்கப்படுவதாக இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு இராணுவ புலனாய்வாளர்கள் விரைந்த சென்ற போது கஞ்சா போதை பொருளை இறக்கி கொண்டிருந்த நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்

இதனை அடுத்து 98 பொதிகளில் இருந்து 220 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளையும் அவற்றை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட படகினையும் இராணுவ புலனாய்வு பிரிவினர் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This