ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
கடந்த திங்கட்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் புதன்கிழமை மீட்கப்பட்டான்.
சிறுவன் மயக்க நிலையில் இருந்தமையால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் மருத்துவமனை அதிகாரி தீபக் சர்மா கூறுகையில்,
“கிணற்றுக்குள் சிறுவன் சுவாசிப்பதற்கு ஏற்றவாறு ஒட்சிசன் செலுத்தி வந்தோம். ஆனாலும் பலத்த காயம் மற்றும் உணவின்மை, குழாய்க்குள் இருந்த சூழல் போன்றவை சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமாயிற்று.
இதுபோன்ற கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை உடனுக்குடன் மூடினால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கலாம்” என்றார்.