
முறையாக பதவி விலகாத முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது
முறையாக பதவி விலகாது பணிக்கு சமூகமளிக்கத் தவறிய முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளின் ஒழுக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
