ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிக்க ஆளும் கட்சியின் ஒரு குழு இணக்கம் – முஜிபுர் ரஹ்மான்

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிக்க ஆளும் கட்சியின் ஒரு குழு இணக்கம் – முஜிபுர் ரஹ்மான்

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சகத்தியால் பரிந்துரைக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த வேட்பாளருக்கு தேசிய மக்கள் சக்தியில் உள்ள ஒரு குழுவினர் வாக்களிக்க தயாராக இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியால் மேயராக முன்மொழியப்பட்ட நபருக்கும் ஐகு்கிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கும் இடையிலான அனுபவத்தையும் இடைவெளியையும் புரிந்துகொண்டு, தேசிய மக்கள் சக்தியில் உள்ள ஒரு குழு ஐக்கிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்ட நபருக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

கொழும்பு மாநகர சபையை தொடர்ச்சியாக 20 வருடங்களாக பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக நிறுத்தும் என்றும், தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் கூட அவருக்கு வாக்களிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்கு நிர்வகிக்கப்படும் நகராட்சி மன்றமாக கொழும்பு மாநகர சபை முன்னேறுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்புப் பகுதியில் வசிப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் ஒருவரை மேயராக நியமிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This