
அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் தேசபந்து
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் அவர் இன்று ஆஜராக உள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதி பிரீதிபத்மன் சூரசேன தலைமையிலான குழு இன்று பிற்பகல் 02 மணிக்கு கூடுவுள்ளது.
தேசபந்து, ஏற்கனவே மே 19 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இந்த குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டமா அதிபர் துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் தொடர்பான சத்தியக் கடிதங்களும் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CATEGORIES இலங்கை
