10,000 பேருக்கு எலிக்காய்ச்சல்

10,000 பேருக்கு எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 10  ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்று வரையில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப் பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருமாக இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன், ஆளுநர் தொலைபேசியில் நேற்றுப் புதன்கிழமை மாலை உரையாடினார்.

 

Share This