உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் -மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு செலன்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளுக்கு வலியுறுத்தல்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரம் -மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு செலன்ஸ்கி மீண்டும் நட்பு நாடுகளுக்கு வலியுறுத்தல்

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் ஒரே இரவில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 48 மணி நேரத்தில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட இரண்டாவது பெரியளவிலான தாக்குதல் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரியளவான தாக்குதலை எதிர்கொண்டதைத் தொடர்ந்து 30 இற்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் மீட்புப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் போர் நிறுத்தத்தில் ஈடுபட மாஸ்கோ மீது அதிக அழுத்தம் கொடுக்குமாறு உக்ரைன் மீண்டும் அதன் நட்பு நாடுகளை வலியுறுத்துகிறது.

அமெரிக்காவின் மௌனம் புடினை ஊக்குவிக்கும் எனவும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகவும் செலென்ஸ்கியின் கூற்று அமைந்துள்ளது.

Share This