திருகோணமலையில் கோர விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலையில் கோர விபத்து – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே இன்று காலை பாரிய விபத்து பதிவாகியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட திருஞானசம்பந்தர் வீதியின் பிரதான சந்தியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது குறித்த வீதியினை கடக்க முற்பட்ட ஓர் சிறியராக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு எதிர் திசையில் பயணித்த சிறியரக வானுடன் மோதியதில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

250cc திறன் கொண்ட குறித்த மோட்டார் வண்டி முற்றாக சேதமடைந்திருப்பதுடன் குறித்த வானுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This