துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் இன்று சனிக்கிழமை காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொழும்பில் – வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த துப்பாக்கி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது, இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

 

Share This